அமெரிக்க கூட்டாட்சி தொலைத்தொடர்பு ஆணையமும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையும், சீனா மீது மேற்கொண்டுள்ள எதிர்மறை நடவடிக்கைகளுக்கு பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்வதாக சீனா அறிவித்துள்ளது. இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் ஆகஸ்ட் 5ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில்,
கட்டாய உழைப்பு என்ற பெயரில் சீன நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா தடை விதிக்கும் செயல், இரு நாட்டு அரசுத் தலைவர்களுக்கிடையே எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்களுக்கு கடுமையாக மீறியதுடன், சீனாவின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைச் சீர்குலைத்துள்ளது. இதனால், சீனா அதற்கு தேவையான எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார். ட்ரோன் மற்றும் முக்கிய பாகங்கள், தொழில் நுட்பம் துறையில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி கட்டுபாட்டை வலுப்படுத்துதல், ஆறு அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
அவர் மேலும் கூறுகையில், எதிர் நடவடிக்கை மேற்கொள்வதில் சீனா கட்டுபாட்டுடன் செயல்பட்டுள்ளது. ஆனால், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால், சீனா மேலும் எதிர் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
