பாஜகவுக்கு 27 தொகுதிகள்! ஆனால் நயினார், வானதிக்கு பழைய தொகுதி இல்லையா?

Estimated read time 1 min read

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த முறை பாஜகவுக்கு கூடுதலாக 7 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, நாகர்கோவில், கோவை தெற்கு, திருநெல்வேலி மற்றும் மொடக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, நாகர்கோவில் – எம்.ஆர். காந்தி, கோவை தெற்கு – வானதி சீனிவாசன், திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி – சி.கே. சரஸ்வதி ஆகியோர் கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில்,2026 தேர்தலுக்கான தொகுதிகள் பங்கீட்டு அறிவிப்பில், நயினார் நாகேந்திரன் வென்ற திருநெல்வேலி, வானதி சீனிவாசன் வென்ற கோவை தெற்கு ஆகிய இரு தொகுதிகள் இடம் பெறவில்லை.

ஏற்கனவே பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோர் தொகுதி மாறுவதற்கு திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.அதற்கேற்றார்போல், இன்றைய அறிவிப்பில் அவர்கள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்நிலையில், அவர்கள் இருவரும் எந்தத் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும் போட்டியிட இருப்பதாக சொல்லப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author