சீன-உருகுவே அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

Estimated read time 1 min read

 

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த உருகுவே அரசுத் தலைவர் யமண்டு ஓர்சியுடன் பிப்ரவரி 3ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனாவும் உருகுவேயும் ஒன்று மற்றதன் மைய நலன்களுடன் தொடர்புடைய முக்கிய விஷயங்களுக்கு உறுதியுடன் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், பல்வேறு நிலைகளிலான மற்றும் பன்முகமான நட்பார்ந்த பரிமாற்றத்தை நெருக்கமாக்க வேண்டும் என்றார். மேலும், இரு தரப்பும் நெடுநோக்கு தொடர்புகளை வலுப்படுத்தி, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், நிதி, வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்பு, அடிப்படை வசதிக் கட்டுமானம், தகவல் தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புக்கு வசதியளித்ததோடு, மக்களுக்கிடையிலான புரிந்துணர்வை முன்னேற்ற வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

தவிரவும், உருகுவே உள்ளிட்ட பிரதேச நாடுகளுடன், சீன-லத்தின் அமெரிக்க பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்ற சீனா வரும்புவதாகவும் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author