அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில், முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.
நம் நாட்டின் குடியரசு தினவிழாவில் பல்வேறு நாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பது வழக்கம்.
அந்தவகையில், அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவை ஒட்டித் தற்போதில் இருந்தே உலக தலைவர்களை அழைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவிற்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோரை இந்தியா சிறப்பு விருந்தினர்களாக அழைத்துள்ளது.
