மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை  

Estimated read time 1 min read

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள எரிசக்தி சவால்கள் குறித்து விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 6:30 மணியளவில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ‘மாதிரி நடத்தை விதிமுறைகள்’ (Model Code of Conduct) அமலில் இருப்பதால், அந்த மாநில முதலமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள்.
அதற்குப் பதிலாக, அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் அமைச்சரவை செயலகம் (Cabinet Secretariat) தனியாக ஆலோசனை நடத்தும்.

Please follow and like us:

You May Also Like

More From Author