ஈரானின் பள்ளி மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்த சீனா

ஈரான், சீனா மற்றும் கியூபாவின் வேண்டுகோளின் பேரில், ஈரானின் மினாப் தொடக்கப் பள்ளி மீதான தாக்குதல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 61வது அமர்வு 27ஆம் நாள் அவசர விவாதத்தை நடத்தியது. ஜெனீவாவிலுள்ள ஐ.நாவின் அலுவலகம் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதியான ஜியா குய்டே இதில் கலந்துகொண்டு, சீனாவின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ஈரானின் மினாப் தொடக்கப் பள்ளி மீதான தாக்குதலில் 168 சிறுமிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டது. மனித உரிமைகளுக்கு மிக கடுமையான மீறலாகும் என்றும், சீனா ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளதோடு, இத்தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறது என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்பவையின் அதிகாரமின்றி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலை நடத்தியது என்பது இத்துயரச் சம்பவத்திற்கு மூல காரணம். அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். அனைத்துத் தரப்புகளும் நேர்மையான முறையில் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கி, பிரதேச மக்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்க உண்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author