15வது சீன தேசிய விளையாட்டுப் போட்டியின் ஒளிபரப்பு மற்றும் ஒன்றிணைப்பு ஊடகத் தொழில் நுட்பக் கருத்தரங்கு நவம்பர் 10ம் நாள் சீனாவின் குவாங் ச்சோ நகரில் நடைபெற்றது. 15வது சீன தேசிய விளையாட்டுப் போட்டியில் பயன்படுத்தப்படும் சீன ஊடகக் குழுமத்தின் 10 புத்தாக்கத் தொழில் நுட்பங்கள் இக்கருத்தரங்கில் வெளியிடப்பட்டன. உயர் தெளிவுப் படம், செயற்கை நுண்ணறிவு, இலகு ரக தயாரிப்பு முதலிய புதிய தொழில் நுட்பங்கள், பார்வையாளர்களுக்கு மேலும் செழுமையான அம்சங்கள், பங்கேற்பு உணர்வைத் தரும் சூழல், தனித்துவமான பார்வை அனுபவம் ஆகியவற்றை வழங்கவுள்ளன.
