ஹாங்சோ வழியாக சீனாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Estimated read time 1 min read

இவ்வாண்டின் துவக்கம் முதல் ஆகஸ்ட் 14ஆம் நாள் வரை, சீனாவின் ஹாங்சோ நுழைவாயிலின் மூலம் சீனாவுக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 2.7 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 12 விழுக்காடு அதிகரித்துள்ளது. விசா விலக்கு கொள்கையால் சீனாவுக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 1.6 இலட்சமாகும். கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 20 விழுக்காடு அதிகரித்தள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தென் கொரியா, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா முதலியற்றைச் சேர்ந்தவர்.

கோடைக்காலத்தில், ஹாங்சோ விமானம் நிலையம், புசான், ஹோ சி மின் முதலிய சூடான சர்வதேச வழித்தடங்களைப் புதிதாக திறந்து வைத்து, தென் கொரியா, தாய்லாந்து, சீனாவின் ஹாங்காங் முதலிய இடங்களுக்கான இருவழி தடங்களை அதிகரித்துள்ளது.

படம்:VCG

You May Also Like

More From Author