அமெரிக்க செனட் அவையின் 4 உறுப்பினர்கள் சமீபத்தில் தைவானுக்கு பயணம் செய்தது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் மார்ச் 30ஆம் நாள் கூறுகையில், அமெரிக்காவுக்கும் தைவான் பிரதேசத்துக்கும் இடையேயான அதிகாரப்பூர்வத் தொடர்புகளை சீனா எப்போதும் உறுதியுடன் எதிர்க்கிறது என்றும், அமெரிக்க தரப்பிடம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்றும் கூறினார். மேலும், சீன-அமெரிக்க உறவுகளின் ஒட்டுமொத்த நலன்களையும் தைவான் நீரிணையிலுள்ள அமைதி மற்றும் நிலைத்தன்மையையும் பேணிக்காக்கும் வகையில் அமெரிக்கா நடைமுறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தைவான் பிரச்சினையில் தொடர்ச்சியான, தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள சீனா, தனது இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
4 அமெரிக்க செனட்டர்களின் தைவான் பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு
You May Also Like
அடுத்த 60 ஆண்டுகளில் சீன-பிரான்ஸ் உறவு தொடர்ந்து வளர்க!
January 26, 2024
நெருக்கமாக ஒன்றிணைக்கப்பட வேண்டிய குடும்பமும் நாடும்
August 29, 2025
சீன செஞ்சிலுவை சங்கத்தின் மாநாட்டுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
October 9, 2024
More From Author
சீனாவின் மொத்த சரக்கு புழக்கத் தொகை அதிகரிப்பு
December 29, 2024
CIIEஇல் 83 பில்லியனுக்கும் அதிகமான ஒப்பந்தங்கள் கையொப்பமிட்டன
November 10, 2025
