ஜுலை மாதம் சீனாவின் தூதஞ்சல் வளர்ச்சிக் குறியீடு கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 2.4 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சீன அஞ்சல் பணியகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறும் போது, இத்துறையின் வளர்ச்சி அளவு, சேவைத் தரம், வளர்ச்சி ஆற்றல் ஆகியவற்றின் குறியீடுகள், முறையே கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 5.8 விழுக்காடு, 0.1 விழுக்காடு மற்றும் 1.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஜுலை மாதம் இத்துறை நிதானமாகவும் ஒழுங்காகவும் இயங்கியது. அதன் ஒட்டுமொத்த போட்டியாற்றல் தெளிவாக வலிமையாக மாறியுள்ளது.
குறிப்பாக, “தூதஞ்சல் ஊரில் நுழைவது” என்ற திட்டப்பணியின் தொடர்ச்சியுடன், கிராமப்புறங்களின் நுகர்வு உயிராற்றலை இடைவிடாமல் ஊக்குவிக்கப்பட்டு, இணைய கொள்முதல் சேவை மேலதிக கிராமவாசிகள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம்:VCG
