ஈரானை முற்றுகையிடும் அமெரிக்காவின் சிறப்புப் படைகள்…

Estimated read time 0 min read

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில் இரு தரப்பினருக்கும் இடையேயான தாக்குதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.

போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ள போதிலும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்கி வருகின்றன.

இதன் அடுத்தகட்டமாக ஈரானுக்குள் தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஈரானின் முக்கியப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சுமார் மூவாயிரத்து ஐந்நூறு கூடுதல் வீரர்களை வளைகுடா பிராந்தியத்திற்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இந்த வீரர்கள் ஈரானை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளை ஏற்கனவே வந்தடைந்துள்ள நிலையில் அவர்களில் ஆயிரம் பேர் வான்வழியாகக் குதித்து அதிரடித் தாக்குதல் நடத்தும் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கப் படைகள் ஈரான் மண்ணில் தரைவழியாக இறங்கினால் அது மிகப்பெரிய உயிர்ச் சேதங்களையும் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும் என சர்வதேச நாடுகள் அஞ்சுகின்றன.

இருப்பினும் அமெரிக்கப் படைகள் ஊடுருவ முயன்றால் அவர்களுக்கும் அவர்களது கூட்டாளிகளுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் இந்த ஆவேசமான அறிவிப்பால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் மேலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author