ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஆகஸ்டு 6 மற்றும் 9ஆம் நாள் முறையே 81ஆவது ஆண்டு நினைவு நாட்களாகும். தன் ஆக்கிரமிப்பு வரலாற்றை ஆழமாகப் பிரதிபலித்து, போர் தரும் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டிய இந்த நாட்களில், ஜப்பானின் ஊடகங்கள் வெளியிட்ட ஒரு தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது. ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ள 2027ஆம் நிதியாண்டுக்கான பாதுகாப்பு வரவு செலவு விண்ணப்பம் 8 லட்சத்து 90 ஆயிரம் கோடி ஜப்பானிய யெனை எட்டி, மீண்டும் வரலாற்றில் புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக இத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கட்டுப்பாடுகளை மீறி, புதுவித இராணுவவாதம் மீண்டும் தலைத்தூக்குவதை முன்னேற்றுவதற்கான ஜப்பானின் அரசியல்வாதிகளின் பேராசையை இது வெளிப்படுத்தியுள்ளது. ஜப்பானின் புதுவித இராணுவவாதத்தின் செயல்கள், பிரதேசத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
மக்களின் விருப்பத்தை மீற முடியாது என்ற நிலையில், சனே தகைச்சி அரசு மக்களின் குரலைக் கேட்டறிய வேண்டும். வரலாற்றுப் போக்கைத் தவறாக மதிப்பிட்டு, அமைதி மற்றும் மக்களின் விருப்பத்துக்குப் புறம்பான தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. ஜப்பானிய அரசின் ஆபத்தான செயல்களுக்கு, அதனைச் சிற்றியுள்ள நாடுகள், தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வருகின்றன.
