ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய விதிகள் – அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மீது தனது முழுமையான அதிகாரத்தைச் செலுத்த ஈரான் புதிய மேலாண்மைத் திட்டத்தை வகுத்துள்ளது.
ஈரானிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்புத் குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ள நிலையில், சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்தில் இது மிகப்பெரிய மாற்றங்களையும் பொருளாதாரச் சிக்கல்களையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் புதிய சட்டதிட்டங்களின்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்கள் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் மீது ஒருதலைப்பட்சமாகப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகளின் கப்பல்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author