வணிக சிலிண்டர் விலை Rs.218 வரை உயர்வு – சென்னையில் புதிய விலை என்ன?  

Estimated read time 1 min read

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, இந்தியாவில் எரிவாயு விலையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதியான இன்று, அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.
புதிய விலை மாற்றத்தின்படி, 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சென்னையில் ₹203 உயர்த்தப்பட்டு, தற்போது ₹2,246 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் ₹195 உயர்ந்து ₹2,078.50 ஆகவும், மும்பையில் ₹2,031 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் அதிகபட்சமாக ₹218 உயர்த்தப்பட்டு, புதிய விலை ₹2,208 ஆக மாறியுள்ளது.
இதேபோல், 5 கிலோ எடையுள்ள சிறிய ரக சிலிண்டர்களின் விலையும் ₹51 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author