11ஆவது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உணவு பாதுகாப்பு அமைச்சர்கள் நிலை கூட்டம் ஆகஸ்ட் 25ஆம் நாள், ஹாங்சோ நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், துணை தலைமையமைச்சருமான லியூ கோங்சோங் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.
உணவு பாதுகாப்பு என்பது மனித குலத்தின் உயிர் வாழ்வுக்கான அடிப்படை பிரச்சினையாகும். வேளாண், கிராமப்புறம், விவசாயிகள் எனும் பணியில் சீன அரசு உறுதியாகவும் முக்கியமாகவும் கவனம் செலுத்தி வருகிறது. வேளாண் துறையின் பன்நோக்க உற்பத்தி ஆற்றலை வலுப்படுத்தி வருவதோடு, தனிச்சிறப்பு வாய்ந்த உணவு பாதுகாப்பு வளர்ச்சிப் பாதையில் சீனா நடைபோட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் வலியுறுத்துகையில்,
உலகின் உணவு பாதுகாப்பைப் பேணிக்காப்பதில் இந்த ஒத்துழைப்பு அமைப்பு இன்றியமையாத தகுநிலையை வகிக்கிறது. இவ்வமைப்புடன் இணைந்து, மேலும் நிதானமான உணவு பாதுகாப்பு கட்டமைப்பை கூட்டாகக் கட்டியமைக்க சீனா விரும்புவதாக என்றார்.
