கம்பம் அருகே ஸ்ரீராமர் கோயிலில் ராமநவமி விழா


கம்பம், மார்ச். 28 தேனி மாவட்டம் கம்பம் அருகே ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் ராமநவமி விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


ஸ்ரீராமர் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் ராமநவமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்பம் அருகே ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் தேனி மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கே.ஆர்.ஜெயபாண்டியன் தலைமையில் நேற்று ராமநவமி விழா கொண்டாடப்பட்டது.


இதில் அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. கம்பம், ஊத்துக்காடு, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author