சிலிண்டர் கவலையை விடுங்க! இனி 5 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்குவது சுலபம்  

Estimated read time 1 min read

மத்திய அரசு எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோக முறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
இனி சாதாரண பொதுமக்கள் 5 கிலோ எடையுள்ள சிறிய சிலிண்டர்களை எவ்வித முகவரிச் சான்றும் இன்றி எளிதாகப் பெற முடியும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த புதிய நடைமுறை குறிப்பாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையவுள்ளது.
பொதுவாக எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு ஆதார் கார்டு அல்லது உள்ளூர் முகவரிச் சான்று சமர்ப்பிப்பது கட்டாயமாக இருந்தது.
ஆனால், தற்போது, 5 கிலோ சிலிண்டர் பெற எவ்வித முகவரிச் சான்றும் தேவையில்லை.
வாடிக்கையாளர்கள் தங்களின் அடையாளச் சான்றை மட்டும் சமர்ப்பித்து, அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு ஏஜென்சிகளிடம் இருந்து இந்த சிலிண்டர்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

You May Also Like

More From Author