டிரம்ப்பின் பதவி நீக்கத்திற்கு குவியும் ஆதரவு; அமெரிக்காவில் நடத்தப்பட்ட அதிரடி கருத்துக்கணிப்பு  

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்க அந்நாட்டு அரசியலமைப்பின் 25-வது திருத்தத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அவருக்கு எதிராக ‘பதவி நீக்கத் தீர்மானம்’ (Impeachment) கொண்டு வரப் பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆதரவு தெரிவிப்பதாக புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
லேக் ரிசர்ச் பார்ட்னர்ஸ் அமைப்பு நடத்திய இந்த ஆய்வு, அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
FSFP அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த தேசிய அளவிலான ஆய்வில், 52 சதவீத வாக்காளர்கள் ட்ரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
40 சதவீதம் பேர் மட்டுமே இதனை எதிர்த்துள்ளனர். குறிப்பாக, 46 சதவீதத்தினர் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளனர்.

You May Also Like

More From Author