மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஆவணி மூலத்திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நாள்தோறும் கோயிலில் பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு சேதுபதி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது சுவாமி வேடமிட்ட சிவாச்சாரியாரும், மன்னர் வேடமிட்ட சிவாச்சாரியாரும் பிட்டுக்கு மண்சுமந்த நிகழ்வை அரங்கேற்றினர்.
பின்னர் வந்தியக் கிழவிக்கும், மக்களுக்கும் சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபாடு நடத்தினர்.