கூகுள் நிறுவனம் தனது ‘கூகுள் விட்ஸ்’ தளத்தை இனி அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
இதில் உள்ள ‘வியோ 3.1’ எனும் ஏஐ தொழில்நுட்பம் மூலம், வெறும் ஒரு வரியைத் தட்டச்சு செய்தோ அல்லது ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றியோ மிக எளிதாக வீடியோக்களை உருவாக்க முடியும். கூகுள் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 10 வீடியோக்கள் வரை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இது யூடியூபர்கள், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்பவர்கள் மற்றும் சிறுதொழில் முனைவோருக்கு விளம்பர வீடியோக்களையும் வாழ்த்துச் செய்திகளையும் உருவாக்கப் பெரும் உதவியாக இருக்கும். இந்தத் தளத்தில் கேமரா முன்னால் வர விரும்பாதவர்கள் ‘ஏஐ அவதார்களை’ உருவாக்கிப் பேச வைக்க முடியும். மேலும், ‘லைரியா 3’ கருவி மூலம் காப்புரிமை சிக்கல் இல்லாத இசையை நமது தேவைக்கேற்ப 3 நிமிடம் வரை நீளமாக அமைத்துக் கொள்ளலாம்.
வீடியோவை உருவாக்கியவுடன் நேரடியாக யூடியூபில் பதிவேற்றும் வசதியும் இதில் உள்ளது. இந்தியாவில் வீடியோ உருவாக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கூகுளின் இந்த இலவசச் சேவை தொழில்நுட்ப உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
