நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக நீடிக்கும் – சர்வதேச நிதியம்

Estimated read time 0 min read

நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆறு புள்ளி நான்கு சதவீதமாக நீடிக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

உலக நாடுகளுக்கு கடனுதவி அளிக்கும் சர்வதேச நிதியமானது, கடந்த ஏப்ரலில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் ஆறு புள்ளி ஐந்து சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது.

இந்த நிலையில், அதில் சற்று குறைவாக ஆறு புள்ளி நான்கு சதவீத வளர்ச்சியை நடப்பு நிதியாண்டில் இந்தியா பதிவு செய்யும் என சர்வதேச நிதியம் தற்போது புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் பொதுமக்களின் வாங்கும் திறன் மற்றும் சேவைத் துறையின் வளர்ச்சியால், உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தாலும், இந்தியா உறுதியுடன் முன்னேறும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

You May Also Like

More From Author