விரைவில் வெளியிடவுள்ள அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்க வழிகாட்டு நிதி ஹாங்காங் அறிமுகம்
குறிப்பிட்ட நெடுநோக்குத் தன்மை வாய்ந்த புதிதாக வளர்ந்து வரும் மற்றும் எதிர்காலத் தொழில்களில் முதலீடு செய்வதற்குச் சந்தை நிதியங்களுக்கான வழிகாட்டுதல்களை வலுப்படுத்தும் வகையில், மொத்தம் 1000 கோடி ஹாங்காங் டாலர் மதிப்புள்ள அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத் வழிகாட்டு நிதி விரைவில் சந்தைக்கு வரவுள்ளது என்று ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி லீ கா சியு ஜான் பிப்ரவரி 10ஆம் நாள் தெரிவித்தார்.
ஹாங்காங் பயன்பாட்டு அறிவியல் தொழில் நுட்ப ஆய்வகம் 10ஆம் நாள் ஹாங்காங்கில் முதலாவது பயன்பாட்டு அறிவியல் தொழில் நுட்ப உச்சிமாநாட்டை நடத்தியது. அப்போது லீ கா சியு ஜான் காணொளி மூலம் கூறுகையில், வாழ்க்கை மற்றும் சுகாதார அறிவியல் தொழில்நுட்பம், முன்னேறிய தயாரிப்பு முதலிய நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் முடிவுகளின் தொழில்மயமாக்கலைத் துரிதப்படுத்துவதற்காக தனது அரசு புதிய தொழில்துறையை முடக்கிவிடும் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது என்றார்.