சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஏப்ரல் 15 முதல் 17ஆம் நாள் வரை மலேசியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
உயர்நிலை நெடுநோக்கு தன்மையுடைய சீன-மலேசிய பொது எதிர்காலச் சமூகத்தையும், சீன-மலேசிய உறவின் புதிய “50 ஆண்டுகள் பொற்காலத்தை”யும் உருவாக்க இரு தரப்பும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன.
சீனாவும் மலேசியாவும், ஒன்றுக்கொன்று நெடுநோக்கு அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, பொது நலன்கள் தொடர்ச்சியாக விரிவடைந்து வருவதை இரு நாட்டுறவின் உயர்வு எடுத்துக்காட்டுகிறது.
மேலும், சீனாவும் மலேசியாவும் பிரதேசப் பொருளாதார ஒருமைப்பாட்டை ஆக்கமுடன் முன்னேற்றி, திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையுடைய பொருளாதார ஒத்துழைப்புக்கு ஆதரவளித்து, ஒருதரப்பு வர்த்தக தடையை எதிர்த்து வருகின்றன. இது, இரு தரப்புகளின் ஒத்துழைப்புக்கு உறுதியான அடிப்படையை வழங்கியுள்ளது.
புதிய யுகத்தில், சீன-மலேசிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கம் குறித்து, நெடுநோக்கு சுயாட்சியில் ஊன்றி நின்று, உயர்நிலை நெடுநோக்கு ஒத்துழைப்புகளை மேற்கொள்தல், வளர்ச்சி திறனை ஒன்றிணைத்து, உயர்தர வளர்ச்சி ஒத்துழைப்புக்கான முன்மாதிரியை உருவாக்குதல், தலைமுறை தலைமுறையான நட்புறவை வெளிக்கொணர்ந்து, நாகரிகப் பரிமாற்றம் மற்றும் பகிர்வை ஆழமாக்குதல் ஆகிய மூன்று முன்மொழிவுகளை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்தார். அரசியல் பாதுகாப்பு, பயனுள்ள ஒத்துழைப்பு, மானுடவியல் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில், சீன-மலேசிய உறவின் உயர்வுக்கு இந்த மூன்று முன்மொழிவுகள் வழிக்காட்டியுள்ளன.