சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ,11ஆம் நாள், சீனாவின் ஹூநான் மாநிலத்தின் சாங் ஷா நகரில், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் சாதனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பாளரின் அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பல ஆப்பிரிக்க நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்தினார்.
காங்கோ குடியரசு, தென்னாப்பிரிக்கா, ஜிபூட்டி, கானா, கின்சாசா காங்கோ, நைஜர், கினியா-பிசாவ், நைஜீரியா, புர்கினா பாசோ, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டனர்.