
நடிகை மீனா 82ம் ஆண்டு ‘நெஞ்சங்கள்’ படத்தில் சிவாஜியுடன் சேர்ந்து நடித்து அறிமுகமானார். 84ம் ஆண்டு, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில், ரஜினியுடன் நடித்தார். இந்தப் படத்தில், மாற்றுத்திறனாளியாகவும் நடித்து அசத்தினார்.மீனா இதுவரை ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், அஜித், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதில் பெரும்பாலான திரைப்படங்கள் ஹிட் ஆகியிருக்கின்றன.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாகவே இருந்தார் அவர். டோலிவுட்டிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடினார். கிளாமர் ரோலாக இருந்தாலும், ஹோம்லி ரோலாக இருந்தாலும் அசால்ட்டாக செய்யக்கூடியவர் அவர். அதேபோல் அவரது தமிழ் உச்சரிப்பும் அவ்வளவு அழகாக இருக்கும். சமயங்களில் அவர் ஹீரோயினாக மாறிய பிறகும் அவர் பேசுவது மழலை தமிழில் இருப்பதாக அதையும் ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்தார்கள்.
ஒரு காலத்தில் பிசியான ஹீரோயினாக நடித்து வந்த மீனாவிற்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து இவருக்கு நைனிகா என்கிற மகள் பிறந்தார். இவர், விஜய்யின் தெறி படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.கடந்த 2022ஆம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார்.
ஒரு காலத்தில் முக்கிய ஹீரோயினாக வலம் வந்த மீனா, இப்போது முக்கிய குணச்சித்திர நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் மலையாளத்தில் உருவான த்ரிஷ்யம் திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார்.மீனா, 20 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புத்திசாலித்தனமான ஒரு முடிவு, இப்போது அவருக்கு பெரிய வகையில் கைக்கொடுத்துள்ளது. இவர், 20 வருடங்களுக்கு முன்பு, ரூ.10 கோடிக்கு ஒரு வீட்டை கட்டியிருக்கிறார். அந்த வீடு, கலைநயத்துடனும் வரலாற்றை பரைசாற்றும் வகையிலும் கட்டப்பட்டிருந்தது.
நவீன கட்டடங்களுக்கு நடுவே இருந்த அந்த வீட்டினை வாங்க நெடு நாட்களாக அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதி ஆர்வம் காட்டி வந்துள்ளனர். தற்போது அவர்களிடம் அந்த விட்டினை சுமார் ரூ.100 கோடிக்கு மீனா விற்றிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சொத்துக்களில் முதலீடு செய்வது முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் அதை எதில் முதலீடு செய்கிறோம் என்பது. மீனா விவரமாக வீட்டில் இன்வெஸ்ட் செய்து தற்போது 100 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறார்.
