உள்ளூர் நேரப்படி செப்டம்பர் முதல் நாளிரவு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கெய்ரோவைச் சென்றடைந்து எகிப்தில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளத் துவங்கினார்.
ஷிச்சின்பிங்கும் அவரது மனைவி பொங் லியுவானும் கைரோ சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்ற, அங்கு அவர்களை எகிப்து அரசுத் தலைவர் அல்-சிசி தம்பதி வரவேற்றனர்.
அப்போது ஷிச்சின்பிங், எகிப்து அரசு மற்றும் மக்களுக்கு மனமார்ந்த வணக்கம் மற்றும் வாழ்த்துக்களை எழுத்து மூல உரையில் தெரிவித்தார். மேலும் இப்பயணத்தின் போது, அரசுத் தலைவர் சிசி உடன் சீன-எகிப்து உறவு, இரு நாட்டு பன்முக ஒத்துழைப்பு, கூட்டு அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் ஆகிவயற்றைக் குறித்து கருத்துகளைப் பரிமாறி இரு நாட்டு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவின் வளர்ச்சிக்குக் கூட்டாக திட்டமிடுவதாகவும் அவர் கூறினார்.
