பெய்ஜிங்கில் குவோமின்டாங் கட்சித் தலைவருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

Estimated read time 1 min read

சீன குவோமின்டாங் கட்சித் தலைவர் ஜெங் லீவெனின் தலைமையிலான பயணக்குழுவை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்தார்.

அப்போது இந்த குழுவுக்கு வரவேற்பு தெரிவித்த ஷிச்சின்பிங், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் குவோமின்டாங் கட்சித் தலைர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்பது, இரு கட்சிகளின் உறவு மற்றும் தைவான் நீரிணையின் இரு கரை உறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்று கூறினார்.

தைவான் நீரிணையின் அமைதி மற்றும் நிலைத்தன்மையையும் இரு கரைகளின் உறவு மேம்பட்டு வருவதையும், மேலும் அருமையான வாழ்க்கையையும் இரு கரைகளைச் சேர்ந்த உடன் பிறப்புகள் எதிர்பார்க்கின்றனர். இது, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் குவோமின்டாங் கட்சி இரண்டும் தவிர்க்க முடியாத பொறுப்பாகவும், ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படுவதற்கான உந்து சக்தியாகவும் திகழ்கிறது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். 

1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒருமித்த கருத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் “தைவான் சுதந்திரத்தை” எதிர்த்தல் ஆகிய பொதுவான அரசியல் அடிப்படையில், தைவானில் உள்ள குவோமின்டாங் உட்பட அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களுடனும் இணைந்து, கருத்துப் பரிமாற்றங்களையும் உரையாடல்களையும் வலுப்படுத்தவும், இரு கரைகளிலும் அமைதியை நாடவும், மக்களின் நல்வாழ்வைப் பெறவும், தேசத்தின் மறுமலர்ச்சியை நனவாக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

மேலும், இரு கரைகளின் உறவை வளர்ப்பது குறித்து 4 அம்ச முன்மொழிவுகளையும் ஷிச்சின்பிங் முன்வைத்தார்.

ஜெங் லீவென் இச்சந்திப்பில் கூறுகையில்

இரு கரைகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும், சீனத் தேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அனைவரும், சீனர்களும் ஒரே குடும்பத்தினரும் ஆவர் என்று கூறினார். 1992ஆம் ஆண்டு எட்டப்பட்ட ஒருமித்த கருத்துக்களைக் கடைப்பிடித்தல் மற்றும் “தைவான் சுதந்திரத்தை” எதிர்த்தல் ஆகிய பொதுவான அரசியல் அடிப்படையில், பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தவும், தொடர்புக் கொள்ளும் தளத்தின் திறனை வெளிக்கொணரவும், பல்வேறு துறைகளிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுத்து செல்லவும் இரு கட்சிகளும் பாடுபட வேண்டும் என்று ஜெங் லீவென் கூறினார்.

 

 

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author