இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஏப்ரல் 16 முதல் தொடங்கும் மூன்று நாள் சிறப்பு அமர்வில் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
இதன் மூலம் லோக்சபாவின் மொத்த இடங்களை 543-லிருந்து 850 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
2029 பொதுத்தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டைச் சிக்கலின்றி அமல்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
புதிய வரைவு மசோதாவின்படி, மொத்தமுள்ள 850 இடங்களில் 815 இடங்கள் மாநிலங்களுக்கும், 35 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்படும்.
தற்போதுள்ள 530 மாநில இடங்கள் மற்றும் 13 யூனியன் பிரதேச இடங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய உயர்வாகும்.
இந்திய நாடாளுமன்ற மறுசீரமைப்பு: 850 இடங்களாக உயர்கிறது லோக்சபா; தமிழகத்திற்கு எத்தனை இடங்கள்?
