ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்: டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை  

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர் “விரைவில் முடிவுக்கு வரும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முழுமையாக முடக்கும் வரை ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் தொடரும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Fox Business-ற்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறுகையில், “ஈரான் உடனான போர் முடிவுக்கு மிக அருகில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஆனால், இப்போதே நாங்கள் பின்வாங்கினால், அந்த நாடு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப 20 ஆண்டுகள் ஆகும். நாங்கள் இன்னும் எங்கள் பணிகளை முழுமையாக முடிக்கவில்லை,” என்று கூறினார்.
ஈரானுடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா விரும்புவதாகவும், ஈரான் அதற்கு இணங்கி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author