இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு நிலைமை இன்று (வியாழக்கிழமை) மீண்டும் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.
நகரின் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு (AQI) 400-ஐத் தாண்டி ‘தீவிரமான’ (Severe) என்ற சிவப்பு மண்டலத்திற்குள் நுழைந்துள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, இன்று காலை 8:00 மணி நிலவரப்படி டெல்லியின் காற்று தரக் குறியீடு (AQI) 399-ஆகப் பதிவானது.
காற்றின் வேகம் குறைவு மற்றும் வெப்பநிலை சரிவு காரணமாக அடர்த்தியான புகைமூட்டத்தால் நகரம் சூழப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 19-க்கு பிறகு டெல்லி சந்தித்த மிக மோசமான காற்று மாசு இதுவாகும்.
டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு: சிவப்பு மண்டலத்தில் நுழைந்தது AQI
