கோவை : தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நடத்தும் கருப்புக் கொடி போராட்டத்தை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில்,“பாராளுமன்றத் தொகுதி வரம்புரை தமிழ்நாட்டுக்கு பாதிப்பு என்று திரு. ஸ்டாலின் அவர்களே ஏற்கனவே உள்துறை அமைச்சர் சென்னைக்கு வந்தபோது தமிழ்நாடு எந்த விதத்திலும் பாதிக்காது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இப்போது எதற்காக கருப்புக் கொடி போராட்டம்?
நல்லா புரிஞ்சுகோங்க சாதாரண ஆள் இல்ல, இப்போ இருக்கிற முதலமைச்சர். இவருக்குத் தெரியும் எப்படி இந்தப் பாராளுமன்ற வரம்புரை செயல்படுத்தப்படும்னு முன்கூட்டியே தெரியும். ஏன்னா அங்கங்க கருப்புக் கொடி கட்டினா, இப்ப இவரு நினைக்கிற மாதிரி அறிவிச்சிட்டா, பார்த்தியா நான் போராட்டம் பண்ணேன். ஆஹா மத்திய அரசு பயந்து போச்சு. என்ன சொல்லுவாரு?இவரு கருப்புக் கொடி ஊர் பூரா கட்டின பிறகு, இவரு நினைப்பதற்கு மேல நல்லது செய்யப் போறாங்க.
ஸ்டாலின் நினைப்பதற்கு மேலாக, அவருடைய கட்சி கூட்டணித் தலைவர் நினைப்பதற்கு மேலாக, அற்புதமாக இந்தப் பாராளுமன்றத் தொகுதி வரம்புரை செயல்படுத்துவாங்க.அப்ப என்ன சொல்லுவார் தெரியுமா? இன்றைய முச்சம் ஸ்டாலின், நான் கருப்புக் கொடி வீடு பூராம் தமிழகத்திலே கட்டிய காரணத்தினால் மத்திய அரசு பயந்து போய் நான் சொல்வதை ஆமோதித்து அதை நிறைவேற்றும்னு சொல்லுவார்.
பாருங்க நாளைக்கு பத்திரிக்கையில் அப்படித்தான் வரும். அவர் எல்லாம் தெளிவா இருக்கிறாங்க. மத்தியில இருக்கிற ஆட்சியாளர் தெளிவா இருக்காங்க. நம்முடைய மாநிலம் மட்டுமில்ல, இந்தியாவில் இருக்கிற அனைத்து மாநிலங்களிலும் பாதிக்காத அளவுக்கு பாராளுமன்றத் தொகுதி வரம்புரை செயல்படுத்தப்படும் என்று உறுதி கொடுத்துட்டாங்க.
உறுதிப்படி செயல்படுவாங்க. மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பாங்க.ஆனா ஒரு ஆளுக்கு மட்டும் மகிழ்ச்சி இருக்காது. யாரு? திரு. ஸ்டாலினுக்கு. அவர் கண்ட கனவு பலிக்கலையே. அவர் கண்ட கனவு அதுக்கு தான் இந்தக் கருப்புக் கொடி போராட்டம்.” எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இந்தப் பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
