சீனத் தேசிய முன்னேறிய தயாரிப்பு தொழில் மாநாடு அண்மையில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உத்தரவு இதில் வலியுறுத்தப்பட்டது. தயாரிப்புத் தொழில் துறைக்கு பசுமைமயமாக்கத்தையும், பசுமை வர்த்தகத்தின் விரிவாக்கத்திற்கும் புதிய உந்து ஆற்றலையும் இது கொண்டும் வரும் என்று ஆய்வாளர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
2026 சீனாவின் பசுமை வர்த்தக வளர்ச்சிக்கான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன்படி, 2025ஆம் ஆண்டில், சீனாவின் பசுமை வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை, உலகளாவிய மொத்த பசுமை வர்த்தகத் தொகையில் 14.68 விழுக்காட்டை வகித்து, உலகில் முதலிடத்தில் உள்ளது.
தற்போது, உலகின் வர்த்தகம் பசுமை மற்றும் குறைந்த கார்பன் மாற்றத்திற்கான முக்கிய காலக்கட்டத்தில் உள்ளது. உலகில் மிகப் பெரிய பசுமை வர்த்தகம் கொண்ட நாடான சீனா, பசுமை வர்த்தகத்தை விரிவாக்குவது, சொந்த உயர்தர வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். தவிரவும், வளர்ந்த நாடுகளின் பசுமைமயமாக்கும் மாற்றத்திற்கு இது துணை புரிவதோடு, உலக காலநிலை மாற்றச் சமாளிப்பு பணிக்கு பங்காற்றும்.
உலகின் பசுமை உற்பத்திப் பொருட்களை வினியோகிக்கும் நாடுகளில் சீனா முக்கிய ஒன்றாகும். உலகின் பசுமை உற்பத்திப் பொருட்களுக்கான முக்கியமான சந்தையாகவும் சீனா விளங்கும். சீனாவின் பசுமை மற்றும் குறைந்த கார்பன் உள்நாட்டுத் தேவைச் சந்தையின் விரிவாகி வருவதன் விளைவாக, உலகின் வினியோக சங்கிலியின் பசுமைமயமாக்கத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணியைத் தொடர்ந்து மேம்படுத்தி, உலகின் பசுமை மேலாண்மையில் சீனா ஆழமாகப் பங்கெடுத்து வருவது என்பது மேலும் முக்கியமானது. அதேவேளையில், பசுமை சார்ந்த சர்வதேச ஒத்துழைப்புகளில் சீனா தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறது. இது, வளர்ந்த நாடுகள் சொந்தமான பசுமை வளர்ச்சி ஆற்றலை வலுப்படுத்துவதற்கு துணை புரியும். மேலும், உலகின் பசுமை வர்த்தகத்தை விரைவுபடுத்தி நிதானப்படுத்தும் முக்கிய ஆற்றலாகவும் சீனா மாறியுள்ளது.
