செப்டம்பர் திங்கள் 24ஆம் நாள் காலை, அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கிற்கு அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வரவேற்பு விழா நடத்தினார். விழாவில் பேசிய டிரம்ப், நானும் தலைவர் ஷி அவர்களும் இரு நாடுகளின் மேலும் அழகான எதிர்காலத்தை உருவாக்கத் தொடர்ந்து ஒத்துழைப்புகளை மேற்கொள்வோம் என்றார். மேலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயணம் மேற்கொண்ட தலைவர் ஷி அவர்களுக்கும் ஃபெங்லியுவான் அம்மையாருக்கும் தனது நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
