சீன ஊடகக் குழுமம் தயாரித்த திரைப்படப் பண்பாட்டுக் கார்னிவல் நிகழ்வு ஏப்ரல் 15ஆம் நாள் சேஜியாங் மாநிலத்தின் நிங்போ நகரில் துவங்கியது. சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன், சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, உலகளாவிய 41 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரம் பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, உலகம், சீனாவை அறிந்து கொள்வதற்கான முக்கிய ஜன்னலாக திரைப்படம் திகழ்வதும், சீனப் பண்பாடு திரைப்படங்களின் வழியாக வெளிநாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதும் தெரியவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, செழுமையான கருப்பொருட்களைக் கொண்ட சீனத் திரைப்படங்கள், சீனாவின் பாரம்பரிய மற்றும் நவீனக் காட்சிகளைப் பன்முகங்களிலும் எடுத்துக்காட்டியுள்ளன. இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தவர்களுள் 81.6 விழுக்காட்டினர், சீனப் பண்பாட்டின் ஆற்றல் மற்றும் செல்வாக்கு உயர்வேகமாக உயர்ந்து வருவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். அது போன்று 78.6 விழுக்காட்டினர் சீனப் பண்பாடு பெரும் ஈர்ப்பு ஆற்றல் கொண்டுள்ளதாகவும், 64.9 விழுக்காட்டினர் பாரம்பரிய பண்பாட்டின் வெளிக்கொணர்வு மற்றும் புத்தாக்கத்தில் சீனத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களின் பங்கினைப் பாராட்டியும் கருத்து தெரிவித்துள்ளனர்.
