“விசில் சின்னத்தை கோலமாக போடுங்க”- விஜய் வேண்டுகோள்

Estimated read time 1 min read

தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போட வேண்டும் என தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “என்னுடைய அம்மா,அக்கா, தங்கைகள் எல்லோருக்கும் சின்ன வேண்டுகோள்…

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது… அதனால் எனக்காக அனைவரும் உங்கள் வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போட வேண்டும். அது விஜய்க்கு கொடுக்கிற மிகப்பெரிய ஆதரவாக இருக்கும்” என பேசினார்.

You May Also Like

More From Author