அமைதியான சீனா என்ற முன்முயற்சியை மேலும் உயர்ந்த நிலைக்கு மேம்படுத்த வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு பிப்ரவரி 28ஆம் நாள் காலை நடத்திய 19ஆவது குழு பயிலரங்கிற்குத் தலைமைத் தாங்கியபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாடு மேலும் பாதுகாப்பாகவும், சமூக ஒழுங்கு மேலும் சீராகவும், ஆட்சிமுறை மேலும் பயனுள்ளதாகவும், மக்கள் மேலதிக மனநிறைவு அடையவும், தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.