சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் செப்டம்பர் 21ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் ஸ்மிஸின் தலைமையிலான அமெரிக்கப் பிரதிநிதிகள் அவையின் பிரதிநிதிக்குழுவைச் சந்தித்துரையாடினார்.
லீ ச்சியாங் கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும் உலகில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த வல்லரசுகளாகும். சீன-அமெரிக்க உறவின் சீரான தொடரவல்ல வளர்ச்சி, இரு நாடுகளின் பொது நலன்களுக்கும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்கும் பொருந்தியது.
இவ்வாண்டு துவக்கம் முதல், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அரசுத் தலைவர் டிரம்பும் பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இரு நாடுகள் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என ஒருமனதாக கருதி, அடுத்த கட்டத்தில் சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சிக்கு நெடுநோக்கு ரீதியில் வழிவகுத்துள்ளனர். அமெரிக்காவுடன் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, சமாதான சக வாழ்வு நடத்தி, ஒத்துழைப்பு மூலம் நலன் பெற சீனா விரும்புகிறது. அமெரிக்கா சீனாவுடன் இணைந்து ஒரே திசையை நோக்கி முன்னேறி, இரு தரப்புறவு சரியான வளர்ச்சியைக் கூட்டாக தூண்ட வேண்டும் என சீனா விரும்புகிறது என்றார்.