மத விவகாரங்களுக்கான மேலாண்மை சட்டமாக்கத்தை வலுப்படுத்தும் சீனா

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் ஐக்கிய முன்னணி விவகார அமைச்சருமான லீ கான் ஜியே ஏப்ரல் 18ஆம் நாள் முதல் 22ஆம் நாள் வரை, கான்சு மற்றும் சிச்சுவான் மாநிலங்களில் ஆய்வு பயணம் மேற்கொண்டார்.

இப்பயணத்தின் போது அவர் திபெத்தியல் ஆராய்ச்சிப் பணியைக் கள ஆய்வு செய்ததோடு, பல்வகை தேசிய இன ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்களுடன் ஆழ்ந்த பரிமாற்றத்தையும் மேற்கொண்டார்.  

அப்போது அவர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் மத விவகாரங்களுடன் தொடர்புடைய முக்கியக் கொள்கை தீர்மானங்களை ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும், திபெத் மரபுவழி புத்தமதத் துறையினர்களுக்கான கல்வி மற்றும் பயிற்சி பணிகளை வலுப்படுத்தி, தாய்நாட்டின் ஒன்றிணைப்பு மற்றும் தேசிய இனத்தின் ஒருமைப்பாட்டை உறுதியாகவும் கூட்டாகவும் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author