சீன-ஆப்பிரிக்கா மகளிர் கல்வி பற்றிய கூட்டம் செப்டம்பர் 5ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவியும் குழந்தைகள் மற்றும் மகளிர் கல்வியை மேம்படுத்துவதற்கான யுனெஸ்கோவின் சிறப்புத் தூதருமான பெங் லியுவான் அம்மையார் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
மேலும் 2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள 26 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களது மனைவிகளும் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கூட்டாகக் கலந்து கொண்டனர்.
பெங் லியுவான் அம்மையார் கூறுகையில், மகளிர் கல்வியின் இலட்சியத்தை மேம்படுத்தி சிறந்த எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் பயணத்தில், சீனாவும் ஆப்பிரிக்காவும் இரு தரப்பின் நட்பார்ந்த ஒத்துழைப்பு எழுச்சியைத் தொடர்ந்து வெளிக்கொணர்ந்து, சமநிலை, பொறுமை மற்றும் உயர்தர திசையில் உலகளாவிய குழந்தைகள் மற்றும் மகளிர் கல்வி வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றி, மேலும் அருமையான உலகத்தைக் கூட்டாக உருவாக்கி அனுபவிக்க வேண்டும் என்றார்.