நாகலாந்தில் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால்
பல்வேறு இடங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயமடைந்தனர். மோன் நகரம், டிசிட் (Tizit) உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், அசாம் துணை ராணூவப்படையினர், காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சாலை சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாரம் முழுவதும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
