உலகளவில் மதிப்பு மிக்க பட்டியலில் எண்ணிக்கை அளவில் முதலிடம் பிடித்த சீன வாகனப் பிராண்டுகள்

Estimated read time 1 min read

2026ஆம் ஆண்டில் உலகளவில் மதிப்பு மிக்க 100 முன்னணி வாகன பிராண்ட் என்னும் அறிக்கையை பிரிட்டனில் அமைந்துள்ள பிராண்ட் நிதி குழுமம் 23ஆம் நாள் வெளியிட்டது. இப்பட்டியலில் சீனாவைச் சேர்ந்த 24 வாகன பிராண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதோடு, இப்பட்டியலில் எண்ணிக்கை அளவில் சீன வாகனப் பிராண்டுகள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளன.

இவ்வறிக்கையின்படி, புதிய எரியாற்றல் மற்றும் அறிவார்ந்த மயமாக்கத்தின் அடிப்படையில், உலகளாவிய வாகனத் தொழில் நிறுவனங்கள் தற்போது தங்களின் மாற்றங்களை விரைவுபடுத்தி வருகின்றன. பிவைடி(BYD), கீலி(Geely), எஸ்.ஏ.ஐ.சி(SAIC) உள்ளிட்ட சீன வாகன நிறுவனங்கள், முழுமையானத் தொழில் சங்கிலியின் ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம், உலகமயமாக்கல் உத்திநோக்கு ஆகியவை மூலம், ஆசியா மற்றும் ஐரோப்பா முதலிய இடங்களில் தங்களது சந்தைப் பங்கை விரிவுபடுத்தி வருகின்றன. இதனால் அந்நிறுவனங்களின் சர்வதேச செல்வாக்கும் சீராக அதிகரித்து வருகிறது. 2025ஆம் ஆண்டில், உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி, உலகளாவிய சந்தைப் பங்கு மற்றும் பிராண்டுகளின் எண்ணிக்கை ஆகிய ஐந்து துறைகளில், சீனாவின் புதிய எரியாற்றல் வாகனங்கள் உலகளவில் முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author