தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்ட ஆறு புதிய திட்டங்களை முன்மொழிந்தார்.
இந்தியாவின் நாகரிக விழுமியங்கள் உலக முன்னேற்றத்திற்கு வழிகாட்ட முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆறு முக்கிய முன்மொழிவுகள் பின்வருமாறு:-
உலகளாவிய பாரம்பரிய அறிவு களஞ்சியம் (Global Traditional Knowledge Repository): நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் பாரம்பரிய அறிவு முறைகளை ஆவணப்படுத்தி, எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல இந்த களஞ்சியம் உதவும்.
ஆப்பிரிக்கா திறன் மேம்பாட்டு முயற்சி (Africa Skills Multiplier Initiative): அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஆப்பிரிக்காவில் ஒரு மில்லியன் சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்களை உருவாக்குவதன் மூலம், அந்த கண்டத்தின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.
ஜி20 மாநாட்டில் உலகளாவிய வளர்ச்சிக்காக 6 புதிய திட்டங்களை முன்மொழிந்தார் பிரதமர் மோடி
