சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 4ஆம் நாள் முற்பகல், பிரெஞ்சு அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரானுடன் சந்திப்பு நடத்திய பிறகு, இருவரும் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூட்டாக பங்கெடுத்தனர்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,
நாங்கள் நட்பார்ந்த, பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளோம். குறிப்பிட்ட 4 துறைகளில் பணிகளை சீராக நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளோம். கூட்டு அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவது, பயனுள்ள ஒத்துழைப்புகளை விரிவாக்குவது, மானுடப் பண்பாட்டு பரிமாற்றத்தை விரைவுபடுத்துவது, சீர்திருத்தத்தை முன்னேற்றி, உலகின் ஆட்சிமுறையை மேம்படுத்துவது ஆகிய 4 துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வோம்.
வெளிநாட்டுத் திறப்பு என்பது சீனாவின் அடிப்படை கொள்கையாகும். சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு அளவு மேலும் விரிவாக்கப்படும் என்று ஷிச்சின்பிங் மீண்டும் வலியுறுத்தினார்.
