பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுதோறும் ரூ.36,000…மகளிருக்கு பிரதமர் மோடியின் வாக்குறுதி!

Estimated read time 0 min read

மேற்கு வங்காளம் : சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று 147 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29, 2026 அன்று மீதமுள்ள 147 தொகுதிகளில் நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், இரண்டாவது கட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி ஹூக்ளி, வங்காளம் மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் பகுதிகளில் பேரணிகளில் பங்கேற்று உரையாற்றினார். இந்தப் பேரணிகளில் பெண்கள் அதிகாரமளிப்பை மையப்படுத்தி முக்கிய வாக்குறுதிகளை அவர் அறிவித்தார்.

பிரதமர் மோடி கூறியதாவது“மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.36,000 மாற்றப்படும். ஐந்து ஆண்டு ஆட்சியில் இது ரூ.1.80 லட்சம் ஆகும். மாதம் ரூ.3,000 உதவித் தொகையாக வழங்கப்படும்.” என அறிவித்தார்.

அதே சமயம், பெண்கள் அதிகாரமளிப்பே பாஜகவின் முதன்மையான முன்னுரிமை என்று வலியுறுத்திய மோடி, “வங்காளப் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே எங்கள் இலக்கு. அரசு வேலைகளில் 33% இட ஒதுக்கீடு மற்றும் ஆண்டுக்கு ரூ.36,000 நிதியுதவி மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம்” என்று உறுதியளித்தார்.

இதேவேளையில், மோடி ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தார். “ஊழல் குற்றச்சாட்டுகள் மீது உச்ச நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. வங்காள அரசு ‘நபான்னா’ தலைமைச் செயலகத்திலிருந்து செயல்படுவதில்லை” என்று கேலி செய்து பேசிஅவர், ஆளும் கட்சியுடன் தொடர்புடைய சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டினார்.

இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 அன்று நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படியான சூழலில், பிரதமர் மோடியின் பெண்கள் நல வாக்குறுதிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author