ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 6.2 ரிக்டர் அளவில் குலுங்கிய ஹொக்கைடோ  

Estimated read time 1 min read

ஜப்பானின் வடக்குப்பகுதியான ஹொக்கைடோ தீவில் இன்று (ஏப்ரல் 27, 2026) அதிகாலை ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ அல்லது பெரிய அளவிலான பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தரவுகளின்படி, ஹொக்கைடோ தீவில் உள்ள சரபெட்சு நகருக்கு மேற்கே சுமார் 18 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நிலப்பரப்பிலிருந்து சுமார் 81 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் (JMA) இதை 6.2 ரிக்டர் என்றும், USGS 6.1 ரிக்டர் என்றும் கணக்கிட்டுள்ளன.

You May Also Like

More From Author