இந்தியா – நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்து: யாருக்கெல்லாம் வேலை கிடைக்கும்?  

Estimated read time 1 min read

இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்(FTA) இன்று புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் முறைப்படி கையெழுத்தாகிறது.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.
ஒன்பது மாதங்களில் எட்டப்பட்ட இந்த வேகமான ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள 1.3 பில்லியன் டாலர் வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த முதல் நாளிலிருந்தே, இந்தியாவின் 8,284 ஏற்றுமதி பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தையில் 100% வரி விலக்கு கிடைக்கும்.

You May Also Like

More From Author