மகாராஷ்டிராவில் வெடித்த மொழிப்போர்..!! 

Estimated read time 1 min read

மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் மராத்தி மொழி பேசுவது கட்டாயம் என அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்த முடிவுக்கு வடமாநிலங்களைச் சேர்ந்த ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், சுமார் 15 லட்சம் பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

“உங்களால் மராத்தி பேச முடியாவிட்டால் உங்கள் சொந்த ஊருக்கே திரும்பிச் செல்லுங்கள்” என ஒரு தரப்பினர் கூற, இந்த விவகாரம் அங்கு பெரும் மொழிப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், முன்னா சவுகான் என்பவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

<a href=”http://

“>

“மகாராஷ்டிராவை விட்டு வெளியேறி உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாருக்கு வாருங்கள்; அவமானங்களை இனியும் சகித்துக் கொள்ள வேண்டாம்” என அவர் அதில் பேசியுள்ளார். இதற்கு இணையவாசிகள் மத்தியில் கடும் விவாதம் எழுந்துள்ளது.

சிலர் இந்த முடிவை ஆதரித்தாலும், பலர் “பிழைப்பு தேடி வந்துவிட்டு மாநிலத்தின் சட்டத்தை மதிக்காமல் பேசுவது தவறு” என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் மகாராஷ்டிராவில் மொழி சார்ந்த அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author