தமிழர்கள் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் வைப்பது போல, சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் புத்தாண்டுக்கான சித்திர ஓவிய அலங்காரம் இன்றியமையாத ஒன்றாகும். சிச்சுவான் மாநிலத்தின் மியென்ட்சூ நகரிலுள்ள சித்திர ஓவியமானது சீனாவின் பொருள் சாரா மரபு செல்வங்களில் ஒன்றாகும். இம்மரபு செல்வத்தின் வாரிசு, பாதுகாப்பு, சித்திர ஓவியப் பொருட்களின் புத்தாக்க உற்பத்தி, பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா முதலிவற்றை ஒன்றிணைத்து வளர்ந்துள்ள மியென்ட்சூ நகர் புகழ் பெற்ற சுற்றுலா கிராமம் எனப் பாரட்டப்படுகின்றது. புத்தாண்டுக்கான சித்திர ஓவியத்தைப் பொருளாதார வளமாக மாற்றி உள்ளூர் விவசாயிகளின் வருமான அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. இக்கிராமமானது 2024ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சத்து 70 ஆயிரமான பயணிகளை வரவேற்றுள்ளதோடு அவற்றின் மூலம் 42கோடி யுவான் சுற்றுலா வருமானத்தையும் ஈட்டியுள்ளது.
கிராமச் சுற்றுலாவின் உந்து ஆற்றலாக மாறியுள்ள மரபு செல்வமான சீனப் புத்தாண்டு சித்திர ஓவியம்
Estimated read time
0 min read
You May Also Like
சீனாவின் திரைப்பட நுகர்வு ஆண்டு துவக்கம்
April 19, 2025
புத்தாக்கம்-சீனாவின் வர்த்தகத்திற்கு முக்கிய அம்சம்
December 31, 2025
தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்குச் சீனா எதிர்ப்பு
January 9, 2024
