பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரொன் டிசம்பர் 3ம் நாள் மாலை பெய்ஜிங்கை வந்தடைந்து, 3 நாட்கள் நீடிக்கும் தனது சீன பயணத்தைத் தொடங்கினார். இது அவரது 4வது அரசு முறை பயணம் ஆகும். சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவில் சீனத் தலைவரின் பிரான்ஸ் பயணத்தை அடுத்து, பிரான்ஸ் அரசுத் தலைவர் சீனாவுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவுடன் தூதர் நிலை உறவை நிறுவிய முதலாவது மேலை நாடாகும். சீனாவும் பிரான்ஸும் ஐ.நா பொதுப் பேரவையின் நிரந்தர உறுப்பு நாடுகளாகும். மாக்ரொனின் சீனப் பயணம், சீன-பிரான்ஸ் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை புதிய கட்டத்துக்குள் கொண்டு செல்லும் என்றும், உலகின் நிர்வாக மேம்பாட்டுக்குப் புதிய உந்து சக்தியை ஊட்டும் என்றும், பல்வேறு தரப்புகள் எதிர்பார்ப்பு தெரிவித்தன.
