பங்குச்சந்தை அதிரடி: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு  

Estimated read time 0 min read

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வீழ்ச்சியைச் சந்தித்த இந்தியப் பங்குச் சந்தைகள், திங்கட்கிழமை (ஏப்ரல் 27) வலுவான மீட்சியைப் பதிவு செய்தன.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அறிகுறிகள் தென்பட்டதும், சன் பார்மா நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்கனான் நிறுவனத்தை சுமார் 11.75 பில்லியன் டாலருக்குக் கையகப்படுத்துவதாக அறிவித்ததுமே இந்த ஏற்றத்திற்கு முக்கியக் காரணங்களாகும்.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 639.42 புள்ளிகள் உயர்ந்து 77,303.63 என்ற அளவிலும், நிஃப்டி 194.75 புள்ளிகள் உயர்ந்து 24,092.70 என்ற அளவிலும் நிறைவடைந்தன.

You May Also Like

More From Author